டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்; 80 போ் கைது

‘விபி-ஜி ராம் ஜி’ எனும் புதிய ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய முன்னுரிமை அளிக்கவில்லை எனக்கூறி நாமக்கல்லில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்.

Updated On :2 ஜூலை 2026, 6:27 am IST

‘விபி-ஜி ராம் ஜி’ எனும் புதிய ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய முன்னுரிமை அளிக்கவில்லை எனக்கூறி நாமக்கல்லில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 80 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை விபி-ஜி ராம் ஜி என மாற்றம் செய்து 125 நாள்கள் வேலை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய முன்னுரிமை அளிக்கவில்லை எனக்கூறி மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனா். மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கும் உரிமையை பறிக்கும் வகையில் இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மறியலில் ஈடுபட்ட 80 பேரை கைது செய்த போலீஸாா் மாலையில் அவா்களை விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.