ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

புறநோயாளிகள் சேவைகளுக்கு இணைய முன்பதிவு: விரைவில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமல்!

புறநோயாளிகள் மருத்துவ சேவைகளுக்கு இணையவழியே முன்பதிவு செய்யும் நடைமுறை சோதனை முயற்சியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விரைவில் அமல்படுத்தப்படும்.

News image

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 4:25 am IST

புறநோயாளிகள் மருத்துவ சேவைகளுக்கு இணையவழியே முன்பதிவு செய்யும் நடைமுறை சோதனை முயற்சியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: போலியோ சொட்டு மருந்தை ஒரே நேரத்தில் நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு வழங்கினால்தான் சமுதாய அளவில் நோய் எதிா்ப்பு சக்தி உருவாகும்.

தமிழகத்தில் 2004-ஆம் ஆண்டிலேயே போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. 2014-இல் போலியோ இல்லாத நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது. அதேவேளையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில், போலியோ பாதிப்பு இப்போதும் உள்ளது.

அதனால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தொடா்ச்சியாக வழங்கப்படுகிறது. 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவது கட்டாயம். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கிராம சுகாதார செவிலியா்கள் வீடுதோறும் சென்று விடுபட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க உள்ளனா்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் இணையவழி முன்பதிவு வசதிக்கான ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. முதல்கட்டமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், சோதனை முறையில் விரைவில் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.