டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

அரக்கோணத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சா் காந்தி ராஜ் தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் அரக்கோணத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் தொடங்கி வைத்தாா்.

News image

போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சா் வ. காந்தி ராஜ்.

Updated On :29 ஜூன் 2026, 12:49 am IST

ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் அரக்கோணத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 76,683 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா தலைமை வகித்தாா். கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தாா்.

இம்முகாமில் ரோட்டரி சங்கங்களின் ஆளுநா் டி.எஸ்.ரவிக்குமாா், மாவட்ட மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், வட்டாட்சியா் கு.வரலட்சுமி, அரக்கோணம் நகராட்சி ஆணையா் ஆனந்தன், சுகாதார அலுவலா் வெயில்முத்து, வட்டார மருத்துவ அலுவலா் மேகலா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணி, சுகாதார ஆய்வாளா்கள் செந்தில், தேவநாதன், தவெக அரக்கோணம் நகர செயலா் ரமேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் நரசிம்மன், ரஷிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.