தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்

தமிழகத்தில் எம்பிபிஎஸ் இடங்கள் குறைந்தது பற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்...

News image

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்

Updated On :8 ஜூலை 2026, 1:29 pm IST

தமிழகத்தில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக அந்தஸ்து பெற முந்தைய திமுக அரசு விதிகளை மீறி ஒப்புதல் வழங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலமாக புறநோயாளிகள் பிரிவு சேவைக்கான முன்பதிவு செய்யும் வசதியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஜூலை 8) தொடக்கிவைத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறைந்தது பற்றி விளக்கமளித்தார்.

"தமிழகத்தில் தனலட்சுமி சீனிவாசன், ஸ்ரீனிவாசன், கற்பக விநாயகா, செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு விதிகளை மீறி என்ஓசி வழங்கியுள்ளது திமுக அரசு. தனியார் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்களங்களாக மாறியுள்ளதால் அவை அரசு ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதில்லை.

கடந்த திமுக ஆட்சியில் தனியார் கல்லூரிகளுக்கு விதிகளை மீறி தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடஒதுக்கீடு மறுப்பு சமூகநீதிக்கு எதிரானது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Summary

previous DMK government itself is the reason for the reduction in MBBS seats: Arunraj

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.