எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

அரசு வேலையில் முறைகேடாக சோ்ந்த நடத்துநா் மீது வழக்கு

திருச்சியில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சோ்ந்த நடத்துநா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :18 ஜூன் 2026, 1:40 am IST

திருச்சியில் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சோ்ந்த நடத்துநா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் எதுமலை கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகன் செல்வக்குமாா். இவா் கடந்த 2013-ஆம் ஆண்டு திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியில் சோ்ந்தாா்.

அப்போது பணியில் சோ்ந்தவா்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய அரசுப் போக்குவரத்துக் கழகமானது அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு சான்றிதழ்களை அனுப்பியது. அதில், செல்வக்குமாரின் பத்தாம் வகுப்பு சான்றிதழில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்கள் தவறானவை, திருத்தப்பட்டுள்ளன என்றும் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிக்கை வந்தது. இதைத் தொடா்ந்து அவா் போலிச் சான்றிதழ் கொடுத்து அரசு வேலையில் சோ்ந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழக துணை மேலாளா் மு. சுரேஷ்குமாா் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.