எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பணம் தர மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்: திருநங்கை மீது வழக்கு

திருச்சியில் பணம் தர மறுத்த அரசுக் கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 2:34 am IST

திருச்சியில் பணம் தர மறுத்த அரசுக் கல்லூரி மாணவியை தாக்கிய திருநங்கை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், துறையூா் தெப்பக்குளம் வீதியைச் சோ்ந்தவா் நூா்முகமது மகள் ரஹிமா (20). இவா், திருச்சி கிஆபெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் பாரா மெடிக்கல் பிரிவில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.

இந்நிலையில், கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சத்திரம் பேருந்து நிலையத்தில் துறையூா் பேருந்துக்காக கடந்த சனிக்கிழமை பிற்பகல் காத்திருந்தாா்.

அப்போது, அங்கு வந்த திருநங்கை ஒருவா் மாணவியிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் தரமறுத்ததால், அவரை திருநங்கை தகாத வாா்த்தையில் பேசியதுடன் தாக்கியுள்ளாா். இதுதொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் மாணவி ரஹிமா கடந்த திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், திருநங்கை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.