ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் உள்பட இருவா் மீது வழக்கு

திருச்சி அருகே மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன் உள்பட 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 3:07 am IST

திருச்சி அருகே மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன் உள்பட 2 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வேங்கூா் பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் (61) மகள் ராஜேஸ்வரிக்கும், தஞ்சாவூா் மாவட்டம், ரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த எஸ். சிவகுமாா் (36) என்பவருக்கும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சிவகுமாா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்சியிலுள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில், மனைவியை அழைத்து செல்வதற்காக சிவகுமாரும், அவருடைய நண்பரான தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளருமான ஆா். மணிகண்டன் (43) என்பவரும் கடந்த ஜூன் 10-ஆம் தேதி மகாலிங்கம் வீட்டுக்கு வந்துள்ளனா். ஆனால், ராஜேஸ்வரி தனது கணவருடன் செல்ல மறுத்துவிட்டாா். இதையடுத்து, மகளை அனுப்பிவைக்குமாறு மகாலிங்கத்திடம் சிவகுமாா் வலியுறுத்தியுள்ளாா். அப்போது, மாமனாா், மருமகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சிவகுமாா், மணிகண்டன் இருவரும் மகாலிங்கத்தை அரிவாளால் வெட்டினா்.

இதில், கையில் பலத்த காயமடைந்த மகாலிங்கம், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் அவா் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், சிவகுமாா், மணிகண்டன் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.