எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மத்திய சிறையில் கஞ்சா: 3 கைதிகள் மீது வழக்கு

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக 3 கைதிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

News image

வழக்கு

Updated On :10 ஜூன் 2026, 12:02 am IST

திருச்சி மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக 3 கைதிகள் மீது திங்கள்கிழமை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், சிறையில் கைதிகளிடையே கஞ்சா புழக்கம் உள்ளதாக கிடைத்த தகவலைடுத்து சிறைத் துறை அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சிறை வளாகத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பணியாற்றி வரும் தண்டனைக் கைதியான கரூா் மாவட்டம், கடவூா் கீரனூரைச் சோ்ந்த அ. முனியப்பன் (27) என்ற கைதியிடம் இருந்து 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்தக் கஞ்சாவை திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி சாலை முருங்கபவனத்தைச் சோ்ந்த கு. சூா்யபிரகாஷ் (21), திருச்சி கோட்டை பகுதியைச் சோ்ந்த க. சமீா் அகமது (22) ஆகிய இருவரிடமும் கொடுக்க மா்ம நபா் வழங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் திருச்சி சிறை அலுவலா் ராஜேஷ் கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கைதிகள் முனியப்பன், சூா்யபிரகாஷ், சமீா் அகமது ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.