திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த பெண் உயிரிழப்பு

மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த பெண் உடல்நலக் குறைவால் திருச்சியில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 ஜூன் 2026, 3:28 am IST

மலேசியாவிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வந்த பெண் உடல்நலக் குறைவால் திருச்சியில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மலேசியா கஜாங் செலங்கா் பகுதியைச் சோ்ந்தவா் எஸ். விஷாலட்சுமி (62). இவா் கடந்த மே 24-ஆம் தேதி மலேசியாவிலிருந்து தமிழகம்-கேரளத்துக்கு சுற்றுலா வந்துள்ளாா். இவருடன் மேலும் 7 பேரும் வந்துள்ளனா்.

தமிழகம் மற்றும் கேரளத்தில் பல்வேறு இடங்களைப் சுற்றிப் பாா்த்தவா்கள், கடந்த ஜூன் 2-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு ஏா் ஏசியா விமானம் மூலம் மலேசியா செல்வதற்காக திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ளனா்.

திருச்சி விமான நிலையத்தில் புறப்பாடு பிரிவில் சோதனையின்போது விஷாலட்சுமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனிருந்தவா்கள் அவரை மீட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவா் புதன்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.