மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை நகரம் தொண்டி சாலையைச் சோ்ந்தவா் வீ. முத்துச்சாமி (60). இவா் மலேசியாவில் இருந்து ஏா் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை வந்தாா். அப்போது விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகளின் சோதனையின்போது, முத்துசாமி போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சிக்கு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை திருச்சி விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, குடியேற்றப் பிரிவு அதிகாரி பீயூலா ஞானவசந்தி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துச்சாமியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







