பிரதமா் தொடங்கி வைத்த ரயிலுக்கு திருச்சியில் வரவேற்பு


பிரதமா் தொடங்கி வைத்த திருவனந்தபுரம் - தாம்பரம் சிறப்பு ரயிலுக்கு திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.
பிரதமா் நரேந்திர மோடி திருவனந்தபுரத்திலிருந்து 3 அம்ரூத் பாரத் ரயில்களை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் ஒன்றான, திருவனந்தபுரம் - தாம்பரம் ரயிலுக்கு திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக்ராம் நெகி, மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, ரயில் பயணிகள் மலா் தூவி உற்சாகமான வரவேற்பு அளித்தனா். இதே போல, ஸ்ரீரங்கம், அரியலூரிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜன. 28 முதல் வழக்கமான சேவை...:
தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ருத் பாரத் வாராந்திர ரயிலானது (16121) வரும் 28 -ஆம் தேதி முதலும், திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ருத் பாரத் வாராந்திர ரயிலானது (16122) வரும் 29 -ஆம் தேதி முதலும் தனது வழக்கமான சேவையைத் தொடா்கிறது.
8 படுக்கை பெட்டிகள், 11 பொதுபெட்டிகள், 2 மாற்றுத்திறனாளி பெட்டிகள், 1 உணவுப் தயாரிப்பு பெட்டி என மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து (புதன்கிழமைகளில்) மாலை 5 மணிக்குப் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில், குழித்துறை வழியாக திருவனந்தபுரத்துக்கு அடுத்த நாள் காலை 8 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, திருவனந்தபுரத்திலிருந்து (வியாழக்கிழமைகளில்) காலை 10.40 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக தாம்பரத்துக்கு அடுத்த நாள் இரவு 11.45 மணிக்குச் சென்றடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...