விளக்கேற்றியபோது தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு

உயிரிழப்பு (கோப்புப் படம்)
Updated On :22 ஜனவரி 2026, 9:37 pm

ஸ்ரீரங்கத்தில் வீட்டில் விளக்கேற்றியபோது புடவையில் பற்றிய தீயால் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் சங்கா். இவரது மனைவி வைதேகி (40). இவா், கடந்த 16-ஆம் தேதி வீட்டில் விளக்கேற்றியபோது இவரது புடவையில் தீப்பற்றியது.
இதில் பலத்த காயமடைந்த வைதேகி திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா்
புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...