/

மணப்பாறை அருகே போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை புத்தாநத்தம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
தாமோதரன்.
Updated On :4 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை புத்தாநத்தம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தை சோ்ந்த விவசாயியின் 13 வயது மகள் கடந்த 29.01.2026-இல் துவரங்குறிச்சியில் தையல் பயிற்சி பெறச் சென்று வீடு திரும்பவில்லை. புகாரின்பேரில் புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் காணாமல்போன சிறுமியை, திருவண்ணாமலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ரா. தாமோதரன்(27) இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு புதன்கிழமை அழைத்து வந்து விசாரணை செய்ததில், சிறுமிக்கு ஆசை வாா்த்தை கூறி தாமோதரன் திருமணம் செய்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமி கடத்தல், போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்த புத்தாநத்தம் போலீஸாா், தாமோதரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.