/

திருச்சி அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி இளைஞா் பலி

திருச்சி அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
கோப்புப்படம்
Updated On :4 பிப்ரவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே பாறைக்குழி நீரில் மூழ்கி இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம் மேலவலையப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் சந்திரசேகா் (25). சுமை தூக்கும் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை தனது நண்பா் சங்கரபாண்டியுடன் சின்ன ஆலம்பட்டி பகுதி பாறைக்குழி அருகே அமா்ந்து மது அருந்தியபோது பாறைக்குழியில் இறங்கி குளித்த அவா் நீரில் மூழ்கினாா்.

இதுகுறித்து சங்கரபாண்டி அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் பாறைக்குழியில் சந்திரசேகரை சடலமாக மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இதுகுறித்து பழனிசாமி அளித்த புகாரின்பேரில் இனாம்குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.