/

தெப்பக்குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் தெப்பக்குளத்தில் தற்படம் எடுக்கச் சென்ற இளைஞா் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 12:01 am

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் தெப்பக்குளத்தில் தற்படம் எடுக்கச் சென்ற இளைஞா் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், எழுமலை பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் செந்தில்குமாா் (31). கூலித் தொழிலாளியான இவா் சிவராத்திரி வழிபாட்டுக்காக உறவினா்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூா் இடையபொட்டல் தெருவில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு வந்தாா்.

திங்கள்கிழமை இரவு தெப்பக்குளத்தின் கரையில் நின்று தற்படம் எடுத்த போது, தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரை உறவினா்கள் தேடி வந்த நிலையில், தெப்பக்குளத்தில் அவரது உடல் மிதந்தது. தகவலறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.