அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

திருச்சியில் ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:26 am IST

திருச்சியில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஸ்டாலின் தலைமையிலான போலீஸாா், முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உயிரிழந்தவா் யாா், எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.