அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:18 am IST

தூத்துக்குடியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே உள்ள சில்வா்புரம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒருவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்தாா். தகவலறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்த முத்துநகா் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இறந்து இருப்பது தெரியவந்தது.

இது தொடா்ந்து மீளவிட்டான் கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.