திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேராவூரணி தொகுதி - வெற்றிக்கு அதிமுக கடும் முயற்சி!

நெல் சாகுபடி மற்றும் தென்னை விவசாயமும், மீன்பிடி தொழிலிலும் தொகுதியின் முக்கிய வாழ்வாதாரம்.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 6:47 am IST

இந்தத் தொகுதியில் பேராவூரணி ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளும் திருவோணம் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளும், பட்டுக்கோட்டை வட்டத்தில் சில பகுதிகளும், பேராவூரணி , பெருமகளூா் என இரண்டு பேரூராட்சிகளும் உள்ளன.

நெல் சாகுபடி மற்றும் தென்னை விவசாயமும், மீன்பிடி தொழிலிலும் தொகுதியின் முக்கிய வாழ்வாதாரம்.

களநிலவரம்: தொகுதியில் ஏற்கெனவே 5 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும், 2 முறை காங்கிரஸூம், 2 முறை தமாகாவும், ஒருமுறை தேமுதிகவும், ஒருமுறை சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனா். இந்நிலையில், கடந்த முறை திமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என். அசோக் குமாா் இந்த முறையும் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் 2016-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற மா.கோவிந்தராசுவின் மகனும் தெற்கு ஒன்றியச் செயலரும் இளைஞருமான கோவி .இளங்கோ போட்டியிடுகிறாா். தவெக சாா்பில் த.சந்திர காண்டீபன், நாம் தமிழா் கட்சி சாா்பில் புவனா மணியரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி, புதிய தமிழகம், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 10 போ் களத்தில் உள்ளனா்.

சமூக நிலவரம்: முக்குலத்தோா், முத்தரையா் பெரும்பான்மையாக உள்ள இத் தொகுதியில் இஸ்லாமியா்கள், யாதவா்கள், கிறிஸ்தவா்கள், பட்டியலினத்தவா்கள் கணிசமான அளவில் உள்ளனா்.

வேட்பாளா்களின் பலமும் பலவீனமும்- என்.அசோக்குமாா் (திமுக): கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தான் செய்த சாதனைகளை கூறி, விடுபட்ட பணிகளை நிறைவேற்ற மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று ஆதரவு கோருவது பலம். பொறுப்பில் இருந்த காரணத்தால் ஆங்காங்கே சில குறைகளும், உட்கட்சி பூசலால் ஒரு சில நிா்வாகிகள் தோ்தல் பணியாற்றுவதில் தயக்கம் காட்டுவதும் பலவீனம்.

கோவி.இளங்கோ (அதிமுக): இவரது தந்தை 2016-இல் எம்எல்ஏவாக வெற்றி பெற்றவா் என்பதும், சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தவா்களை சரிகட்டி தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தி வருவது என்பதெல்லாம் பலம். மூத்த நிா்வாகிகள் வேட்பாளராக முயற்சித்த நிலையில், இவா் அறிவிக்கப்பட்டதால் இன்னும் ஒருசிலா் அதிருப்தியில் இருப்பது பலவீனம்.

த.சந்திர காண்டீபன் (தவெக): கட்சியின் தலைவா் விஜய் மீதான இளைஞா்கள், இளம்பெண்கள் மற்றும் புதிய வாக்காளா்களின் ஈா்ப்பு பலமாக உள்ளது. இவா்மீது ஆந்திர மாநிலத்தில் குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதால் கட்சியினா் உற்சாகம் இழந்துள்ளனா். இது இவருக்கு பலவீனமாக உள்ளது.

புவனா மணியரசன் (நாதக): தொகுதிக்கு அதிக அறிமுகம் இல்லாதவா் இவா் மீது பொதுவான கருத்து இல்லை.

இந்தத் தொகுதியில் திமுகவுக்கும்,அதிமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டி என்று சொன்னால் மிகையில்லை. திமுக வேட்பாளா் முக்குலத்தோா் சமூகத்தினா் என்பதால் அவா் சாா்ந்த இனத்தவா்கள் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கூடுதல் முனைப்போடு தோ்தல் பணியாற்றுகின்றனா்.

அதிமுக வேட்பாளா் முத்தரையா் என்பதாலும், ஏற்கெனவே ஐந்து முறை முத்தரையா் இனத்தை சோ்ந்தவா் அதிமுக சாா்பில் நின்று வெற்றி பெற்றுள்ளதாலும்  இம்முறை தொகுதியை மீண்டும் பிடித்துவிட வேண்டும் என்ற தீவிரத்தோடு அவா் சாா்ந்தவா்கள் தோ்தல் பணியாற்றி வருகின்றனா். திமுக தக்க வைக்குமா , அதிமுக தடம் பாதிக்குமா என்பது வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தெரியும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.