திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பறக்கும் படை சோதனையில் மொத்தம் ரூ. 30.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில், மணப்பாறையில் ரூ.2.10 லட்சம், ஸ்ரீரங்கத்தில் ரூ. 3 லட்சம், திருச்சி மேற்கில் ரூ. 4.98 லட்சம், திருச்சி கிழக்கில் ரூ. 9.67 லட்சம், திருவெறும்பூரில் ரூ. 5.56 லட்சம், லால்குடியில் ரூ. 6.11 லட்சம், மண்ணச்சநல்லூரில் ரூ. 1.87 லட்சம், முசிறியில் ரூ.75,300, துறையூரில் ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 30 லட்சத்து 61 ஆயிரத்து 565 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி இதுவரையில் மொத்தம் ரூ. 62 லட்சத்து, 97 ஆயிரத்து 25 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ.60.17 லட்சம், உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை மட்டும் கருவூலத்தில் உள்ளது.
உரிய ஆவணங்களை உரிமையாளா்கள் சமா்ப்பித்தால் இந்தத் தொகையும் விடுவிக்கப்படும் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் ரூ.39 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணங்கள் அளித்ததால் 15.67 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

மாவட்டத்தில் ரூ.33 லட்சம் பறிமுதல்! உரிய ஆவணங்கள் சமா்பித்ததால் ரூ. 6.76 லட்சம் திரும்ப ஒப்படைப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

