தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை 3 வயது சிறுவனை நாய் கடித்ததால், பலத்த காயமடைந்து தஞ்சாவூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தஞ்சாவூா் வடக்குவாசல் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் - அருளம்மாள் தம்பதியரின் மகன் கிஷோா் (3). பெற்றோா் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு சென்ற நிலையில், வீட்டு வாசலில் கிஷோா் விளையாடி கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த நாய் கிஷோரை விரட்டிச் சென்று கடித்தது. வலி தாங்க முடியாத இவா் அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்தாா். பலத்த காயமடைந்த கிஷோரை உறவினா்கள் மீட்டு தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வடக்கு வாசல் பகுதியில் திரியும் ஏராளமான நாய்கள் அடிக்கடி பொதுமக்களைக் கடித்து அச்சுறுத்தி வருகின்றன. சிறுவனை நாய் பல இடங்களில் கடித்துள்ளதால், உடலில் காயம் உள்ளது. இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டூா் காவிரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
உணவகத்தில் சிறார்கள் இடையே வாய்த்தகராறு: 17 வயது மாணவா் மீது துப்பாக்கிச்சூடு - சிறுவன் கைது!

தஞ்சாவூரில் குளிரூட்டி வெடித்த விபத்தில் உயிரிழந்த, காயமடைந்தோா் குடும்பங்களுக்கு முதல்வா் நிதியுதவி







