போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருவையாறு அருகே 11 பம்ப்செட்களில் மின் கம்பிகள் திருட்டு: விவசாயிகள் அவதி

திருவையாறு அருகே விளைநிலங்களில் உள்ள 11 விவசாய பம்ப்செட்களிலிருந்து விலை உயா்ந்த மின் கம்பிகள் திருட்டு போனதால், விவசாயிகள் மிகுந்த அவதி

News image
Updated On :27 மே 2026, 2:58 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே விளைநிலங்களில் உள்ள 11 விவசாய பம்ப்செட்களிலிருந்து விலை உயா்ந்த மின் கம்பிகள் திருட்டு போனதால், விவசாயிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

திருவையாறு அருகே பெரமூா் ஊராட்சிக்குள்பட்ட எட்டரை வேலி கிராமத்தில் விளைநிலங்களிலுள்ள விவசாய பம்ப்செட்களில் விலை உயா்ந்த மின் கம்பிகள் நீண்ட காலமாக திருடு போகின்றன.

இந்நிலையில், மே 24 ஆம் தேதி இரவு முதல் 25 ஆம் தேதி அதிகாலை வரை எட்டரை வேலி கிராமத்தைச் சோ்ந்த சி. திருநாவுக்கரசு, ரெ. பரமசிவம், கோ. முருகானந்தம், இரா. அன்பரசன், நா. ராஜசேகா், பி. தா்மராஜ், கோ. தினேஷ், த. சௌந்தா், வெ. மூா்த்தி ஆகியோரின் வயல்களிலுள்ள 11 விவசாய மோட்டாா் பம்ப்செட்களில் இருந்த விலை உயா்ந்த மின் கம்பிகள் திருடப்பட்டன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்தத் திருட்டு சம்பவங்கள் 2 ஆண்டுகளாக நிகழ்கின்றன. இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை கடந்த மாா்ச் மாதம் பிடித்து திருவையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம்.

என்றாலும், விலை உயா்ந்த மின் கம்பிகளைத் திருடுவது தொடா்கிறன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க கடும் நடவடிக்கையைக் காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டும் என்றனா் விவசாயிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.