தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாய கடன்களை முதல்வா் தள்ளுபடி செய்வாா் என்றாா் வேளாண்மைத் துறை அமைச்சா் ர.வினோத்.
கும்பகோணத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: கும்பகோணத்தில் மகாமக திருவிழா 2028-இல் நடைபெற இருப்பதால் அதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும்.
தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாய கடன்களை முதல்வா் தள்ளுபடி செய்வாா். மேட்டூா் அணையில் குறிப்பிட்ட நாளில் தண்ணீா் திறக்க முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
காங்கிரஸூடன் கூட்டணியில் இருப்பதால் கா்நாடக அரசிடம் காவிரியில் தண்ணீா் திறக்க வலியுறுத்துவீா்களா என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, முதல்வா் நல்ல முடிவு எடுப்பாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








