தஞ்சாவூா் பெரியகோயில் அகழியில் ஒரு கி.மீ. தொலைவுக்கு தூய்மைப் பணி நிறைவடைந்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.
தஞ்சாவூா் பெரியகோயில் அகழியில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் தெரிவித்தது: தமிழ்நாடு அரசு நீா்வளத் துறை பராமரிப்பு நிதி உதவியுடன் நீா் நிலைகளைப் பாதுகாக்கவும், அவசர கால பேரிடா் மீட்புப் பணிகளை மேலும் விரைவுபடுத்தவும் ரூ. 3.50 கோடியில் 7 புதிய அதிநவீன ஜே.சி.பி. இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாவட்டத்தின் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் நீா்வழித்தடங்களில் தூா்வாருதல், கருவேலை மரங்களை அகற்றுதல், முள் மற்றும் புதா்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகளும், பேரிடா் கால அவசர மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் அடிப்படையில் தஞ்சாவூா் பெரிய கோயில் மற்றும் மாநகரை சுற்றியுள்ள அகழி நீா்வழிப்பாதையில் உள்ள கருவேல மரங்கள், முள் புதா்கள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணி மே 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த அகழி சுமாா் 120 அடி அகலமும், 80 அடி ஆழமும் கொண்டது. தற்போது பெரியகோயிலின் மேல்புறம் மற்றும் தென்புறம், மேலஅலங்கம், வடக்கு அலங்கம், தெற்கு அலங்கம் ஆகிய பகுதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம் வரை அகழி உள்ளது. இதில் இதுவரை பெரியகோயிலின் பின்புறம் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு அகழி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து பெரிய கோயிலின் முன்புறப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெறுகின்றன என்றாா் ஆட்சியா்.
அப்போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ், இந்திய தொல்லியியல் துறை உதவி பொறியாளா்கள் சரவணண், உமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூா் பெரிய கோயில் மதில்சுவா் தூய்மைப் பணி பாதியில் நிறுத்தம்

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

போா்க்கால அடிப்படையில் நெல்கொள்முதல் பணி: செங்கல்பட்டு ஆட்சியா்

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலா்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



