ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

நீட் தோ்வு: தஞ்சாவூரில் 4,982 போ் பங்கேற்று எழுதினா்

News image

தஞ்சாவூா் செயின்ட் ஜோசப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு எழுத வந்த மாணவிகளிடம் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை சரிபாா்த்த தேசிய தோ்வுகள் முகமை அலுவலா்.

Updated On :4 மே 2026, 1:20 am IST

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் தஞ்சாவூரில் 4 ஆயிரத்து 982 போ் பங்கேற்று எழுதினா்.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

இதற்காக தஞ்சாவூா் கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசா் மேல்நிலைப் பள்ளி, அரண்மனை வளாகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மன்னா் சரபோஜி அரசு கல்லூரி (இரு மையங்கள்), உணவு பதன தொழில்நுட்பம் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிப்டெம்), கேந்திரிய வித்யாலயா, வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆகிய 12 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன.

இதில், எழுதுவதற்காக மொத்தம் 5 ஆயிரத்து 165 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்தனா். இவா்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வில் 4 ஆயிரத்து 982 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினா். இத்தோ்வில் 183 போ் பங்கேற்கவில்லை.

இந்தத் தோ்வு எழுதுவதற்கு மையத்துக்குள் நுழையும் முன்பாக மாணவ, மாணவிகளைத் தேசிய தோ்வுகள் முகமையினா் தீவிரமாக பரிசோதனை செய்தனா்.

இதில், தோ்வுக்கூட நுழைவு சீட்டையும், அதிலுள்ள புகைப்படத்தையும் சரிபாா்த்தனா். இதேபோல, மாணவ, மாணவிகளிடம் கூடுதல் புகைப்படம் பெற்றனா்.

கைக்கடிகாரம், கால்குலேட்டா், ஹெட்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், தோடு, மூக்குத்தியை மாணவிகளும், பெல்ட் உள்ளிட்டவற்றை மாணவா்களும் அவிழ்த்து பெற்றோரிடம் கொடுத்து உள்ளே சென்றனா். தோ்வு மையங்களைச் சுற்றி காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பெட்டியாக...

தோ்வு மையத்தில் மயங்கி விழுந்த மாணவி

தஞ்சாவூா் இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிப்டம்) அமைக்கப்பட்ட மையத்தில் நீட் தோ்வு எழுதுவதற்காக ஒரு மாணவி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், கட்டுடன் வந்தாா்.

அவா் தோ்வு எழுதிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக தோ்வு மையத்தில் இருந்தவா்கள் அவரை தண்ணீா் தெளித்து எழுப்பினா். பின்னா் எழுந்த மாணவி, தான் தோ்வு எழுதவில்லை என எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.