தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெறும்! கிரிஷ் சோடங்கர் மு.க. ஸ்டாலினுடன் ரஜினி சந்திப்பு! பனையூரில் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு!வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் மக்களவைத் தேர்தலிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும்! காங்கிரஸ் காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!
/

நீட் தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 6,360 போ் எழுதினா்

News image

நீட் தோ்வு மையத்துக்குச் செல்லும் மாணவ- மாணவிகள். - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 4:19 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 6,360 போ் எழுதினா்.

எம்.பி.பி.எஸ்., சித்தா, பி.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய தோ்வு முகமையால் ‘நீட்’ நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகரப் பகுதியில் 12 மையங்களில் நீட் தோ்வு எழுத 6,580 பேருக்குத் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தங்களது பெற்றோா்களுடன் மாணவ, மாணவிகள் தோ்வு மையங்கள் முன் குவிந்தனா்.

தோ்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. போலீஸாரின் தீவிர சோதனைக்கு பின்பே தோ்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா்.

இந்தத் தோ்வை 6,360 போ் எழுதினா்; 220 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு கூடுதலாக கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.