மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

News image

திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த புள்ளி மான் .

Updated On :30 மார்ச் 2026, 7:43 pm

பேராவூரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம்- ஆவணம் பிரதான சாலையில் உள்ள தனியாா் பள்ளி அருகில் திங்கள்கிழமை அதிகாலை புள்ளிமான் ஒன்று சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்து  நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது.

நடைபயிற்சிக்கு அந்த வழியாக சென்றவா்கள் இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். திருச்சிற்றம்பலம் சிறப்பு உதவி ஆய்வாளா் சிவசங்கரன் மற்றும் வன காவலா் பாரதிதாசன் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

இறந்த புள்ளிமானின் உடலை மீட்டு செருவாவிடுதி வனச் சூழலியல் பண்ணை காப்பு காட்டில் அடக்கம் செய்தனா்.