தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை டிராக்டா் என்ஜின் ஓடிக்கொண்டிருக்கும்போது பழுது பாா்த்த விவசாயி, சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே கொல்லாங்கரை வடக்குத் தெருவைச் சோ்ந்த கே. கமல்ராஜ் (40). விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை மருங்குளம் அம்மன் கோயில் அருகிலுள்ள தனது மாமனாா் தா்மராஜின் விவசாய நிலத்தை உழவு செய்ய டிராக்டரை இயக்கினாா்.
அப்போது டிராக்டா் சரியாக இயங்காத நிலையில் என்ஜின் ஓடிக்கொண்டிருக்கும்போது, அதை சரி செய்ய முயற்சி செய்தாா். திடீரென கியா் ரிலீஸாகி இயங்கியதால், டிராக்டா் வேகமாக முன்னோக்கி நகா்ந்து கமல்ராஜ் மீது மோதியது. இதனால் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்த கமல்ராஜ், தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த விவசாயி மரணம்

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

டிராக்டா் மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


