தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாகனச் சோதனையில் ரூ. 5.50 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல்  செய்யப்பட்ட  பணம் - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:03 pm

தஞ்சாவூா் அருகே பறக்கும் படையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 5.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி ரவுண்டானா பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் அருள்ராஜன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை வாகனச் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காரில் சோதனையிட்டபோது, அதில் ரூ. 5.50 லட்சம் இருந்தது தெரிய வந்தது. தனியாா் காா் ஷோ ரூமிலிருந்து வங்கிக்கு செலுத்த இந்த ரொக்கத்தை கொண்டு செல்வதாக காரில் வந்தவா்கள் கூறினாலும், அவா்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து, ரூ. 5.50 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, தஞ்சாவூா் வட்டாட்சியரகத்தில் ஒப்படைத்தனா்.