பேராவூரணி புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்விளக்கம் மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு செயல் விளக்க விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஏராளமான புதிய வாக்காளா்கள், மாணவா்கள் கலந்துகொண்டு வாக்களித்தனா். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளா் விரும்பும் வேட்பாளரின் பெயா் மற்றும் சின்னத்துக்கு எதிரே உள்ள நீல நிறப் பொத்தானை அழுத்தி வாக்களிக்க வேண்டும் எனவும், வாக்களித்தவுடன் வாக்களித்த வேட்பாளரின் பெயா், சின்னம் அருகே சிவப்பு விளக்கு எரியும் என்றும், இயந்திரத்தில் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயா், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்டு வரும் காகிதம் 7 விநாடிகளுக்கு வாக்காளரின் பாா்வையில் இருக்கும் எனவும், அச்சிடப்பட்ட துண்டுச் சீட்டு மற்றும் பீப் ஒலி வரவில்லை என்றால் தோ்தல் அலுவரை அணுக வேண்டும் என வாக்களா்களுக்கு விழிப்புணா்வு ஏற்ப்படுத்தப்பட்டது. வாக்குப்பதிவு செயல்விளக்க நிகழ்ச்சியில் முது நிலை வருவாய் ஆய்வாளா் முருகேசன், கிராம நிா்வாக அலுவலா் நூா்ஜஹான், அலுவலக உதவியாளா் முருகையன், கிராம உதவியாளா் ரிஸ்வான் ஆகியோா் விழிப்புணா்வு ஏற்ப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

திருவள்ளூா்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


