மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை மருத்துவமனை ஊழியா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 7:22 pm

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவமனை ஊழியரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள அறுவை சிகிச்சை அரங்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த மனோஜ்குமாா் (23) தொழில்நுட்பநராக பணியாற்றி வருகிறாா்.

இவரிடம் அதே கல்லூரியில் தொழில்நுட்பநா் படிப்பில் படிக்கும் 17 வயது மாணவி மாா்ச் 12-ஆம் தேதி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வழி கேட்டாா். அப்போது, மாணவியை மனோஜ்குமாா் அப்பிரிவுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மனோஜ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.