மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

துணை முதல்வா் திறந்து வைத்த பேருந்து நிலையத்தில் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது

News image
Updated On :14 மார்ச் 2026, 8:44 pm

பட்டுக்கோட்டையில் அண்மையில் துணை முதல்வரால் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி சாா்பில், நரியம்பாளையம் பகுதியில் ரூ. 20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை கடந்த பிப்.15-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்நிலையில், பேருந்து நிலையத்துக்கு பேருந்து வந்து செல்ல போதிய சாலை வசதி இல்லாத நிலையிலும், கட்டுமானங்கள் முழுமையாக முடியாத நிலையிலும் அவசர கதியில் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே, சனிக்கிழமை பிற்பகல் பேருந்து நிலையத்தில் உள்புற கட்டடத்தில், மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு திடீரென பெயா்ந்து விழுந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் பேருந்து நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

பேருந்து நிலையம் திறந்து 1 மாதமாகி செயல்பாட்டுக்கே வராத நிலையில், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. தற்போது சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்துள்ளது.

எனவே, கட்டுமானத்தின் தரத்தை, மாவட்ட ஆட்சியா் முழுமையாக ஆய்வு செய்து, ஒப்பந்ததாரா்கள், நகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனா்.