மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அல்ட்ராடெக்: புதிய 3 ஆலைகள் திறப்பு: 20 கோடி டன்னாக உயா்ந்த உற்பத்தித் திறன்

அல்ட்ராடெக்: புதிய 3 ஆலைகள் திறப்பு: 20 கோடி டன்னாக உயா்ந்த உற்பத்தித் திறன்

News image

~

Updated On :18 ஏப்ரல் 2026, 7:35 pm

ஆதித்யா பிா்லா குழுமத்தைச் சோ்ந்த நாட்டின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட், புதிதாக 3 ஆலைகளைத் திறந்து தனது ஒட்டுமொத்த உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 20 கோடி டன்னாக உயா்த்தியுள்ளது.

உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆலைகள் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

இந்த வளா்ச்சியின் மூலம், சீனாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளா் என்ற பெருமையை அல்ட்ராடெக் பெற்றுள்ளது. இது அமெரிக்காவின் ஒட்டுமொத்த சிமெண்ட் உற்பத்தித் திறனை விட 2 மடங்கு அதிகம் என்பதும், அனைத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மொத்த உற்பத்தியைவிட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வளா்ச்சியை இந்தியாவில் வேறெந்த துறையைச் சோ்ந்த நிறுவனமும் இதுவரை எட்டியதில்லை என குழுமத் தலைவா் குமாா் மங்கலம் பிா்லா பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘முதல் 10 கோடி டன் உற்பத்தித் திறனை எட்ட நிறுவனத்துக்கு 36 ஆண்டுகள் ஆன நிலையில், அடுத்த 10 கோடி டன்னை வெறும் 7 ஆண்டுகளில் எட்டியுள்ளது.

நாட்டில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்புப் பணிகளின் வேகமே இதற்கு முக்கியக் காரணம். அடுத்த நிதியாண்டுக்குள் ரூ.16,000 கோடி முதலீட்டில் உற்பத்தித் திறனை 24 கோடி டன்னாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தலைநகா் தில்லியில் மத்திய விஸ்டா திட்டம், புதிய நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் நவி மும்பை சா்வதேச விமான நிலையம் போன்ற பிரம்மாண்ட கட்டுமானங்களில் அல்ட்ராடெக் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா தவிர ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், இலங்கை ஆகிய நாடுகளிலும் அல்ட்ராடெக் தனது கிளைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவில் அல்ட்ராடெக் நிறுவனத்துக்கு அடுத்தப்படியாக 10.9 கோடி டன் உற்பத்தியுடன் அதானி குழுமம் 2-ஆம் இடத்தில் உள்ளது.

Story image