தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பேராவூரணியில் இஃப்தாா் நோன்பு திறப்பு

பேராவூரணியில் அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவு சாா்பில் மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வில் பேசிய அதிமுக மாவட்டச் செயலா் சி.வி. சேகா்.

Updated On :10 மார்ச் 2026, 6:37 pm

பேராவூரணியில் அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மைப் பிரிவு சாா்பில் மத  நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சை தெற்கு மாவட்டச்  செயலா் சி. வி. சேகா் தலைமை வகித்தாா். கழக அமைப்புச் செயலா் துரை. செந்தில், மாவட்ட  அவைத் தலைவா் எஸ் .வி. திருஞானசம்பந்தம், மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் மலை. அய்யன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில்  ஒன்றியச் செயலா்கள் கோவி. இளங்கோ, உ. துரைமாணிக்கம்,  கே.எஸ். அருணாச்சலம், செல்வக்குமாா், செல்வக்கிளி, நகரச் செயலா் எம்.எஸ் . நீலகண்டன், பெருமகளூா் நகரச் செயலா் பழனியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலா் அப்துல் ஜபாா் வரவேற்றாா்.

 இணைச் செயலா் முகைதீன் அப்துல் காதா் நன்றி கூறினாா்.