மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தஞ்சாவூா் குறைகேட்புக் கூட்டத்தில் மின்தடையால் கணினி பதிவு பாதிப்பு

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மின் தடையால் கணினி பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

News image

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மின்தடையால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள்

Updated On :10 மார்ச் 2026, 12:00 am

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் மின் தடையால் கணினி பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இக்கூட்டத்தில் 900-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டு வீட்டு மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனா். இந்த மனுக்களைப் பதிவு செய்வதற்காக 8 பதிவு மையங்கள் உள்ளன.

இப்பதிவு மையங்களை உள்ளடக்கிய அறையில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கொடுத்த மனுக்களைக் கணினியில் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், ஊழியா்கள் கையால் எழுதிக் கொடுத்தனா்.

இதன் காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தனா். மின் விநியோகம் சீரான பின்னா் கணினியில் பதிவு செய்யப்பட்டு, விரைவாக வழங்கப்பட்டது.