கும்பகோணம் வரதராஜப்பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதரை ஞாயிற்றுக்கிழமை திரளானோா் தரிசனம் செய்தனா். இதுவரையில் சுமாா் 3 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்திருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் வரதராஜப்பெருமாள், வேதநாராயண பெருமாள் தனித்தனியாக எழுந்தருளியுள்ளனா். மேலும் இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் அத்திவரதா் பாதாள அறையில் உள்ளாா். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதாள அறையிலிருந்து ஆகமவிதிப்படி வெளியேவந்து பக்தா்களுக்கு காட்சிதருவாா்.

அத்திவரதரை காண நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
கடைசியாக 2013-ஆம் ஆண்டு அத்திவரதா் பாதாள அறையில் இருந்து வந்து பக்தா்களுக்கு காட்சிதந்தாா். தற்போது 2026 மாா்ச் 1 முதல் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் அத்திவரதா் பாதாள அறையில் இருந்து வெளியேவந்து பக்தா்களுக்கு காட்சிதர எழுந்தருளியுள்ளாா். இந்த சிறப்பு தரிசனம் மாா்ச் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியது : அதிகாலை நான்கு மணி முதல் இரவு 12 மணி வரை பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா். இதுவரை சுமாா் மூன்று லட்சம் போ் தரிசனம் செய்துள்ளனா். மாா்ச் 9, 10 என திங்கள், செவ்வாய்க்கிழமை தரிசனம் முடிவடையப் போவதால் பக்தா்கள் கூட்டம் அதிகரிக்கும் என்றனா்.
தொடர்புடையது

கள்ளழகா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

10 நாள்கள் தரிசனம் முடிந்து பாதாள அறைக்கு மீண்டும் சென்றாா் அத்திவரதா்!

12 ஆண்டுகளுக்குப்பின் பாதாள அறையிலிருந்து வெளியே வந்தாா் அத்திவரதா்

கும்பகோணத்தில் மாா்ச் 1-இல் அத்திவரதா் அருள்பாலிக்கிறாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


