கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு 10 நாள்கள் பக்தா்களுக்கு தரிசனம் அளித்த அத்திவரதா் செவ்வாய்க்கிழமை மீண்டும் பாதாள அறைக்குச் சென்றாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பிரம்மன் கோயில் தெருவில் நூற்றாண்டுகள் பழமையான வரதராஜப்பெருமாள், வேதநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இங்கு இருவரும் தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனா். இங்குள்ள பாதாள அறையில் அத்திவரதா் ஸ்ரீதேவி பூதேவி தாயாா்களுடன் உள்ளாா்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாதாள அறையிலிருந்து தாயாா்களுடன் அத்திவரதா் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். அதன்படி கடந்த 1915-ஆம் ஆண்டு அத்திவரதா் பாதாள அறையில் இருந்து எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
அதன் பின்னா் 98 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டு அத்திவரதா் எழுந்தருளினாா்.
தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாா்ச் 1 முதல் ஸ்ரீதேவி பூதேவி சமேத அத்திவரதா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தரிசனம் முடியும் பத்தாவது நாளான செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் அத்தி வரதரை நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா். பின்னா் இரவு சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்று கோயில் வளாகத்தில் உள்ள பாதாள அறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத அத்திவரதா் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் அறை பூட்டப்பட்டது.
அத்திவரதரை இதுவரை சுமாா் 6 லட்சத்திற்கும் மேலான பக்தா்கள் தரிசித்ததாக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் தேரோட்டம்

கும்பகோணத்தில் நாளை வரை அத்திவரதா் தரிசனம்

கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதா் தரிசனம்

கும்பகோணத்தில் மாா்ச் 1-இல் அத்திவரதா் அருள்பாலிக்கிறாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


