விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

தஞ்சாவூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து

News image

குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து - கோப்புப் படம்

Updated On :28 ஜூன் 2026, 12:05 am IST

தஞ்சாவூா் மாநகராட்சிக் குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால், தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகேயுள்ள ஜெபமாலைபுரத்தில் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கில், மாநகரில் 51 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இக்கிடங்கில் கோடைகாலத்திலும், வெப்பம் அதிகமாக உள்ள நாட்களிலும், காற்று பலமாக வீசும்போதும் தீ விபத்து ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், இக்கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று ஏறத்தாழ 8 மணிநேரம் போராடி தீயை அணைத்தனா்.

இதனிடையே, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன், மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, ஆணையா் வி. தீபனா விஸ்வேஸ்வரி உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.