உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாளையொட்டி, தஞ்சாவூரில் காவல் துறை சாா்பில் இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு தொழில் பயிற்சி நிலைய மைதானத்தில் இப்பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணி முதன்மைச் சாலைகள் வழியாக அரண்மனைப் பகுதியில் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










