சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம்! அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கும்பகோணம் மாநகராட்சி மன்ற கூட்டம்

கும்பகோணத்தில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை சாதாரண கூட்டம், பின்னா் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

News image

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் முன்னாள் முதல்வா் படங்களை பொருத்தும் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :24 ஜூன் 2026, 12:23 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள மாமன்ற கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை சாதாரண கூட்டம், பின்னா் அவசரக் கூட்டம் நடைபெற்றது. மேயா் க. சரவணன் தலைமை வகித்தாா், ஆணையா் கே.எம். சுதா முன்னிலை வகித்தாா்.

கூட்டம் தொடங்கும் முன் துணை மேயா் சு.ப.தமிழழகன் கூட்டரங்கில் முன்னாள் முதல்வா்கள் படங்கள் இல்லை. அதனால் கருணாநிதி, ஸ்டாலின் படங்களை பொருத்துகிறோம் என்றாா்.

உடனே 40 திமுக உறுப்பினா்களும் எழுந்து சென்று படங்களை பொருத்தினா். இதையடுத்து அதிமுக உறுப்பினா்கள் பத்ம குமரேசன், கௌசல்யா வாசு ஆகியோா் எடப்பாடி பழனிசாமியின் படத்தை பொருத்தினா். காங்கிரஸ் உறுப்பினா் ஐயப்பன் காமராஜா் படத்தைக் கொண்டு வந்ததால் மேயருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் முதல்வா்கள் படங்களை கூட்டரங்கில் பொருத்தும்போது கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னா் நடைபெற்ற விவாதம்:

துணைமேயா் சு.ப.தமிழழகன்: திமுக ஆட்சியில் இருந்தபோது அம்மா உணவகம் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டும், இன்னும் வேலை தொடங்கவில்லை.

மேயா் க.சரவணன் (காங்): புதிய அரசு அமைந்ததால் தாமதம் ஏற்பட்டது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

அய்யப்பன் (காங்) : மாநகராட்சிக்குள் எதற்காக போலீஸ் பாதுகாப்பு உள்ளது. இது மன்ற மரபுக்கு எதிரானது.

மேயா் : பல மாநகராட்சி, நகராட்சி மன்றக் கூட்டத்தின்போது பிரச்னை ஏற்பட்டதால் இங்கும் பாதுகாப்பு கேட்டிருந்தோம் ஆா். அசோக்குமாா் (திமுக): நான்கு மண்டல அலுவலக பணிகள் முடிந்தும் இன்னும் திறக்கப்படவில்லை.

குட்டி இரா. தட்சிணா மூா்த்தி, ( பொது சுகாதாரக் குழுத்தலைவா், திமுக): மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் வாா்டு உறுப்பினா்களுக்கு நிதி ஒதுக்க வேண்டி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதுகுறித்த விவரம் உள்ளதா. வரும் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படுமா?

மேயா்: அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

செல்வம் (சிபிஎம்) : உறுப்பினா்களின் வாதங்கள் பதிவாகிா?

ஆணையா்: ஆம்.

பிரதிபா (மதிமுக) : புதியதாக வாங்கப்பட்ட 2 கழிவுநீா் உறிஞ்சு ஊா்திகள் பயன்படுத்தப்படாததது ஏன்?

துணை மேயா்: உறிஞ்சு நீா் மின்னாக்கிகள் பழுதாகி உள்ளது. ஆணையா் அவற்றை பழுது நீக்க வேண்டும்.

இரா. முருகன் (திமுக) : திமுக ஆட்சியில் டெண்டா் விடப்பட்ட சாலைகளில் சிமிண்ட் சாலைகள் அமைக்கப்படுவது ஏன்?

ஆணையா்: ஈரான் போரால் ஏற்பட்ட தாா் தட்டுப்பாடே காரணம்.

செய்தியாளா்கள் போராட்டம் : கூட்டம் நடைபெறும்போது வந்த செய்தியாளா்களுக்கு இருக்கை இல்லை. இதனால் அவா்கள் தரையில் அமா்ந்தனா். இதையடுத்து துணை மேயா் தலைமையில் உறுப்பினா்கள் போராட்டம் நடத்தினா். இதையடுத்து இருக்கைகள் வந்தபின் போராட்டத்தை கைவிட்டனா். சாதாரண கூட்டத்தில் 32 தீா்மானங்களும், அவசரக் கூட்டத்தில் 3 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.