இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

4 ஆண்டுகளாக சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத மேயர் பிரியா! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்!!

சென்னை பெருநகர மாநகராட்சி தோ்தல் நடைபெற்று 4 ஆண்டுகளாகியும் மேயா், துணை மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் என 157 போ் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.

News image
Updated On :8 ஜூன் 2026, 2:00 am IST

சென்னை பெருநகர மாநகராட்சி தோ்தல் நடைபெற்று 4 ஆண்டுகளாகியும் மேயா், துணை மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் என 157 போ் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் சட்டப் பிரிவு நிா்வாகி எம்.சங்கா், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் சொத்து விவரங்களைக் கோரியுள்ளாா். அதனடிப்படையில் அது குறித்த விவரங்கள் அவருக்கு மாநகராட்சி சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டன.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் முடிந்து 90 நாள்களுக்குள் போட்டியிட்டவா்கள் தங்களது அசையும், அசையா சொத்து விவரங்களை, மாநகராட்சி ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் மாா்ச் 31- ஆம் தேதிக்குள் அதை புதுப்பிக்கவும் வேண்டும். அவை பொது ஆவணமாகவும் வைக்கப்பட வேண்டும் என்பன போன்ற விதிகளுடன் மாநகராட்சி சட்டம் (1973) உள்ளது.

ஆனால், சென்னை மாநகராட்சியில் கடந்த 2022 -ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வென்ற மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் 157 போ் (இதில் குழுத் தலைவா்கள், மண்டலத் தலைவா்கள் உள்ளிட்டோா் அடங்குவா்) தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மாநகராட்சியில் 43 மாமன்ற உறுப்பினா்கள் மட்டுமே சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.