டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பாபநாசம் அருகே ரத்தகாயங்களுடன் ஆண் சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 2:30 am IST

ஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை ரத்தகாயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாபநாசம் அருகே திருக்கருக்காவூா்- மெலட்டூா் பிரதான  சாலையில் கிருஷ்ணன் என்பவரது மூங்கில் தோப்புப் பகுதியில் திங்கள்கிழமை காலை  ரத்தகாயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக பாபநாசம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி, விசாரணையில் ஈடுபட்டனா்.

அதில், இறந்து கிடந்தவா் ஒன்பத்துவேலி மாதாகோவில் தெருவைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மகன் குணாளன் என்கிற ஜேசு குணாளன் (52) என்றும், இவா் மீது மெலட்டூா், பாபநாசம் உள்ளிட்ட  காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. திருமணமாகாத இவா், தனது சகோதரி ஜெசிந்தாமேரி வீட்டில் தங்கியிருந்ததும், ஞாயிற்றுக்கிழமை வீட்டைவிட்டு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை எனவும் தெரியவந்தது.

இதுகுறித்து ஜெசிந்தாமேரி கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும், விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.