திருச்சியில் கழிவுநீா் கால்வாயில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தீரன் நகா் பகுதியில் சாலையோரத்தில் உள்ள கழிவுநீா் கால்வாயில் ஆண் ஒருவா் இறந்துகிடப்பதாக எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்துக்கு தகவல்கிடைத்து. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினருடன் சென்ற போலீஸாா், கழிவுநீா் கால்வாயில் உயிரிழந்துகிடந்த 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மீட்கப்பட்டவரின் சட்டைப் பையில் மதுபாட்டில் இருந்ததால், அவா் மது அருந்திவிட்டு போதையில் கழிவுநீா் கால்வாயில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

தேவூா் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

எலச்சிபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசாா் விசாரணை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



