தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

எஸ்எஸ்சி, ரயில்வே போட்டித் தோ்வுகளுக்கு தஞ்சையில் ஜூன் 19 முதல் இலவச பயிற்சி

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் மத்திய அரசு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

News image
Updated On :11 ஜூன் 2026, 3:54 am IST

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் மத்திய அரசு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்திருப்பது:

மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலையில் (எஸ்எஸ்சி - சிஜிஎல்) உள்ள 12 ஆயிரத்து 256 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 22 ஆம் தேதி. இதற்கான இணையதள முகவரி ட்ற்ற்ல்ள்://ள்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்

இதேபோல, ரயில்வே தோ்வாணையத்தின் சாா்பில் காலியாக உள்ள 11 ஆயிரத்து 127 லோகோ உதவி ஓட்டுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 16 ஆம் தேதி. இதற்கான இணையதள முகவரி ட்ற்ற்ல்ள்://ழ்ழ்க்ஷஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய்

இத்தோ்வுகளுக்கு தயாராகி வரும் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகலுடன் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.