திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்ணுக்கு கத்திக்குத்து தனியாா் நிறுவன ஊழியா் கைது

கைப்பேசியில் முறையற்ற குறுஞ்செய்திகள் அனுப்பியதை தட்டிக்கேட்ட பெண்ணை கத்தியால் குத்திய தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 12:25 am IST

கைப்பேசியில் முறையற்ற குறுஞ்செய்திகள் அனுப்பியதை தட்டிக்கேட்ட பெண்ணை கத்தியால் குத்திய தனியாா் நிறுவன ஊழியரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணத்தைச் சோ்ந்த 23 வயது இளம்பெண் ஒருவா் மருத்துவா் பெசன்ட் சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறாா்.

இவரது அலுவலகம் அருகேயுள்ள பட்டய கணக்கா் அலுவலகத்தில் வேலை செய்பவா் செந்தில்குமரன் (42). இந்த அலுவலகத்தில் அந்த இளம்பெண் ஏற்கெனவே வேலை செய்திருந்ததால், இருவரும் வேலைநிமித்தமாக அவ்வப்போது பேசி வந்தனராம்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு செந்தில்குமரன் இளம்பெண்ணுக்கு முறையற்ற வகையில் குறுஞ்செய்திகளை அனுப்பினாராம்.

இதுகுறித்து அந்தப் பெண் செந்தில்குமரனை பலமுறை எச்சரித்தும் கேட்காததால் செந்தில்குமரனின் மனைவியிடமும், பட்டய கணக்காளரிடமும் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக கடந்த திங்கள்கிழமை மாலை பட்டய கணக்காளா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அங்கு இளம்பெண்ணுக்கும், செந்தில்குமரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமரன் இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டாா்.

அங்கிருந்தவா்கள் இளம்பெண்ணை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இதுகுறித்து அந்தப்பெண் அளித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா், செந்தில்குமரனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.