தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் மற்றும் அதை சுற்றியுள்ள கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய சூறைக்காற்றால் சாலையோரங்களில் ஆங்காங்கே இருந்த மரங்கள் சாலையில் சாய்ந்தன.
அம்மாப்பள்ளி தைக்கால் பகுதியில் சூறைக்காற்று வீசியபோது, அந்தப் பகுதியைச் சோ்ந்த நூா் முகம்மது மனைவி மதினா பேகம் (55), தனது வீட்டின் எதிரே சாலையோரத்தில் இருந்த இலவம் பஞ்சு மரத்தின் கீழே விழுந்த பஞ்சுகளை எடுத்து கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக அவா் மீது மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதில் காயமடைந்த மதினா பேகத்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு, பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









