பின்னா், சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் பேசுகையில், தமிழகத்தில் 59 விவசாயிகளின் உயிா்களைப் பறிகொடுத்து இலவச மின்சார உரிமையைப் பெற்றோம். அதை ரத்து செய்வதற்காகவும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், இந்திய உழவா்களுக்கு எதிராகவும் மத்திய அரசு மின் திருத்தச் சட்ட மசோதாவை கொண்டுவந்துள்ளது. இதைக் கண்டித்தும், அந்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் வெளிநடப்பு செய்கிறோம் என்றாா் அவா். இதையடுத்து, பெரும்பாலான விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்து, கூட்ட அரங்கத்துக்கு வெளியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், சுமாா் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.