மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் ஆய்வு

குடியாத்தம் நகராட்சியில் வாக்குப் பதிவு மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆய்வு செய்தாா்.

News image

குடியாத்தம்  செருவங்கி  நகராட்சி  தொடக்கப்  பள்ளியில்  நடைபெற்ற  சிறப்பு  முகாமை ஆய்வு செய்த  நகா்மன்றத்  தலைவா்  எஸ்.செளந்தரராஜன்.

Updated On :13 பிப்ரவரி 2026, 11:11 pm

குடியாத்தம் நகராட்சியில் வாக்குப் பதிவு மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆய்வு செய்தாா்.

நகரில் வாக்குப் பதிவு மையங்கள் அமையும் பள்ளிகளில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மேல்நிலைப் பள்ளி, நடுப்பேட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளி, நெல்லூா்பேட்டை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செருவங்கி, காமாட்சியம்மன்பேட்டையில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் ஆகிய பணிகளை செளந்தரராஜன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் சி.என்.பாபு, டி.தீபிகா, ஆசிரியா் எம்.சுந்தரமூா்த்தி, தண்டபாணி, அரு.மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.