/

ஜன. 31 முதல் இரண்டாம் நிலை காவலா்களுக்கான உடற்தகுதித் தோ்வு

News image
Updated On :22 ஜனவரி 2026, 9:48 pm

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூரில் இரண்டாம் நிலை காவலா்களுக்கான உடற் தகுதித் தோ்வு ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் 2025, நவம்பா் 9-ஆம் தேதி நடத்திய இரண்டாம் நிலை காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு தஞ்சாவூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 2-ஆம் தேதி வரை உடற் தகுதித் தோ்வு நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் தலைமையில் நடைபெறவுள்ள இத்தோ்வில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 844 ஆண்கள் பங்கேற்கவுள்ளனா்.