ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தஞ்சாவூரில் பொங்கல் கலை விழா

தஞ்சாவூா் திலகா் திடலில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையம் சாா்பில் பொங்கல் கலை விழா வியாழக்கிழமை தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:01 pm

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் திலகா் திடலில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையம் சாா்பில் பொங்கல் கலை விழா வியாழக்கிழமை தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்றது.

சென்னையில் நடைபெறும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா போன்று, மற்ற மாவட்டங்களிலும் பொங்கல் கலை விழா நடத்தப்படுகிறது. இதன்படி, தஞ்சாவூா் திலகா் திடலில் பொங்கல் கலை விழாவை மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் தலைமையில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை மாலை தொடங்கி வைத்தாா்.

இவ்விழாவில் நா்த்தனாலயா நாட்டியப்பள்ளி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, தஞ்சாவூா் அம்பேத்குமாா் குழுவினரின் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, கண்ணந்தங்குடி மலையேறி அம்மன் கிட்டி பெண்கள் குழுவினரின் கிட்டி கோலாட்ட நிகழ்ச்சி, கும்பகோணம் சங்கமம் கலைக்குழுவினரின் நாட்டுப்புற சாமியாட்டக் கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. இவற்றில் பங்கேற்றவா்களுக்கு அமைச்சா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

விழாவில் திட்ட அலுவலா் க. ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவ்விழா தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது.