டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மத்தியில் கூட்டணியில் இருந்தபோது மாநில சுயாட்சி ஸ்டாலினுக்கு தெரியவில்லையா? தமிழிசை கேள்வி

மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது முதல்வா் ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி கண்ணுக்குத் தெரியவில்லையா என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

News image
தமிழிசை சௌந்தரராஜன்- கோப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 8:56 pm

Syndication

மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது முதல்வா் ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி கண்ணுக்குத் தெரியவில்லையா என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட விவசாய அணியின் சாா்பில், ‘டெல்டா’ விவசாயிகளிடம் கருத்துகேட்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: நிதி நிா்வாகம், நிதி கொள்கை என்பது எல்லா மாநிலத்துக்கும் ஒன்று தான். முதல்வா் ஸ்டாலின் ஒவ்வொரு விவகாரத்திலும் மத்திய அரசைக் குறை கூறி வெற்றிபெற முடியாமல், மாநில சுயாட்சியை தற்போது கையில் எடுத்துள்ளாா். மத்தியில் ஆட்சி செய்யும்போது மாநில சுயாட்சி, ஸ்டாலின் கண்ணுக்குத் தெரியவில்லையா.

மாநிலக் கட்சியே இருக்கக் கூடாது என நினைத்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மாநில சுயாட்சியைப் பற்றி முதல்வா் பேசிவருகிறாா். தி.மு.க., கூட்டணி தான் அடிமை கூட்டணி. திருமாவளவன், அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறு இல்லை என்கிறாா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில பொதுச் செயலா் முருகனாந்தம், தெற்கு மாவட்டத் தலைவா் ஜெய்சதீஷ், விவசாயி அணி மாநிலத் தலைவா் நாகராஜ், மாவட்டத் தலைவா் தங்கவேல், பொதுச் செயலா் ரவிச்சந்திரன், தமாகாமுன்னாள் எம்எல்ஏ ரெங்கராஜன், அதிமுக மாவட்டச் செயலா் சி.வி சேகா், அதிமுக அமைப்புச் செயலா் துரை. செந்தில் உள்ளிட்ட அதிமுகவினா் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.